போக்குவரத்து காவலரை காரின் முன்பக்கம் மோதி தூக்கிச் சென்ற ஓட்டுநர் - அதிர்ச்சி வீடியோ

ஓட்டுநர் சுபம் மீது தென்கிழக்கு டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து காவலரை காரின் முன்பக்கம் மோதி தூக்கிச் சென்ற ஓட்டுநர் - அதிர்ச்சி வீடியோ
காவலரை காரின் முன்பக்கம் மோதி தூக்கிச்சென்ற ஓட்டுநர்
  • News18
  • Last Updated: October 15, 2020, 5:26 PM IST
  • Share this:
டெல்லியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை, பானட் மீது இடித்து தூக்கிச்சென்ற கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி மாலை 5மணிக்கு டெல்லி தவ்லா குவான் பகுதியில் போக்குவரத்து காவலர் மஹிபால், வாகனத்தை நிறுத்தி விதிமீறல் குறித்து விசாரிக்க முயன்றார்.

அப்போது ஓட்டுநர் சுபம் காரை வேகமாக செலுத்தினார். இதில் போக்குவரத்து காவலர், காரின் முன்பகுதியில் சாய்ந்து சிலமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.Also read... கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த தவறான வீடியோ தகவல்களுக்கு தடை : YouTube அறிவிப்பு..

இதையடுத்து போலீஸார் அந்த காரை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தினர். ஓட்டுநர் சுபம் மீது தென்கிழக்கு டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading