SMA எனப்படும் அரிய வகை மரபணு நோய்க்கு இந்திய சந்தையில் மருந்து அறிமுகம்!

மாதிரி படம்

இந்நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவுக்கு வெளிநாட்டிலிருந்து நோவார்டிஸ் நிறுவன தயாரிப்பான Zolgensma  மருந்து இறக்குமதி செய்ய நிதி திரட்டும் பிரச்சாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
SMA எனப்படும் முதுகுதண்டுவட தசை சிதைவு நோய்க்கான மருந்தை  Roche நிறுவனம்  Risdiplam என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

இந்நோய்க்கான மருந்தான Zolgensma அமெரிக்காவில் மட்டுமே கிடைத்து வந்தது. இதன் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாயாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய மருந்துக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையமான FDA 2019ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.  இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்தின் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்  Roche நிறுவனம்  risdiplam என்ற பெயரில் இந்திய சந்தையில் வரும் 10ம் தேதி முதல் மருந்தை  அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இதற்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

இது வரை இந்த மருந்து கருணையின் அடிப்படையில் எந்த குழந்தைக்கு தேவைப்படுகிறது என நிறுவனமும் மருத்துவர்களும் தேர்வு செய்து வழங்குவார்கள். ஆனால் தற்போது இந்த மருந்து தேவைப்படுவோர் வாங்கி கொள்ளும் வகையில் சந்தையில் கிடைக்கவுள்ளது. எனவே இறக்குமதி செய்து பெற வேண்டிய அவசியம் இல்லை.

நோவார்டிஸ் Zolgensma மருந்து ஒரு முறை கொடுத்தால் போதுமானது. ஆனால் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே கொடுக்க முடியும்.

Also read... கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் 188 போலி மருத்துவர்கள் கைது!

Risdiplam வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் கொடுக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் கொடுக்கலாம்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 3 கோடி என விலை இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவுக்கு வெளிநாட்டிலிருந்து நோவார்டிஸ் நிறுவன தயாரிப்பான Zolgensma  மருந்து இறக்குமதி செய்ய நிதி திரட்டும் பிரச்சாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: