முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் உதவிக்காகக் களம் இறங்கும் ரோபோக்கள்..!

காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் உதவிக்காகக் களம் இறங்கும் ரோபோக்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த ரோபோக்களை வெளிநாடுகளிலிருந்து வாங்காமல் இந்திய அறிவியல் நிறுவனங்களே முன்வந்து தயாரித்து வழங்கலாம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சிப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தினருக்கு உதவுவதற்காக ரோபோக்கள் களம் இறக்கப்பட உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் மட்டும் பணியாற்றுவதற்காக சுமார் 550 ரோபோக்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளன. குறைந்தபட்சம் இந்த ரோபோக்கள் 25 ஆண்டுகள் ராணுவ சேவையில் இருக்கும்மாறு தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

புதைக்கப்பட்ட குண்டுகள் உள்ள பகுதிகளைக் கடக்க, உயரமான பகுதிகளில் ஏற ஆகியப் பல முக்கியப் பயன்பாடுகளுக்காக இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளுக்காகவும் முதற்கட்டமாக இந்த ரோபோக்கள் ஈடுபட உள்ளன.

இந்த ரோபோக்களை வெளிநாடுகளிலிருந்து வாங்காமல் இந்திய அறிவியல் நிறுவனங்களே முன்வந்து தயாரித்து வழங்கலாம் என்றும் இதற்கான சந்திப்பை அமைச்சகத்துடன் மேற்கொள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வருகிற நவம்பர் 19-ம் தேதி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ‘இந்த’ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தொல்லை தரும் வாட்ஸ்அப்..!

First published:

Tags: Jammu and Kashmir