சட்டவிரோத பணப்பரிமாற்றம்- விசாரணைக்கு ஆஜராகும் ராபர்ட் வதேரா

விசாரணையில் தன் மீதானக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா மறுத்து வருகிறார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம்- விசாரணைக்கு ஆஜராகும் ராபர்ட் வதேரா
ராபர்ட் வதேரா
  • News18
  • Last Updated: February 7, 2019, 11:48 AM IST
  • Share this:
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் நேற்று முதன்முறையாக ஆஜரான ராபர்ட் வதேரா இன்று மீண்டும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகிறார்.

லண்டனில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளதாகவும், அது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் ராபர்ட் வதேராவைக் கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு நேற்று முதன்முறையாக ஆஜரானார் ராபர்ட் வதேரா. ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு வதேரா ஆஜராகிறார். விசாரணையில் தன் மீதானக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா மறுத்து வருகிறார்.


இதுதொடர்பாக, விசாரணைக்கு வதேரா உடன் வந்த பிரியங்கா காந்தி கூறுகையில், “அவர், என் கணவர். அவர் என் குடும்பம். அவருக்கு எப்போதும் நான் ஆதரவு அளிப்பேன். இந்த விசாரணை எல்லாம் எதற்காக நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறினார்.

மேலும் பார்க்க: தேசம்..தேர்தல்....திருப்பம்...கருத்து கணிப்புகளை பொய்யாக்கிய நேரு
First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்