ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணம் திருடுவதற்கு சோம்பேறித்தனம்பட்டுக் கயிற்றைக் கட்டி அப்படியே இழுத்துக் கடத்திச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையம் அருகிலேயே காவல்நிலையமும் சிறிது துாரத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகமும் உள்ளன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த ஏடிஎம் மையத்திற்கு டவேரா காரில் ஒரு கொள்ளைக் கும்பல் வந்துள்ளது. 4 பேர் கொண்ட அந்தக் கும்பல் தலை முதல் கால் வரை உடை அணிந்து மறைத்தபடி, காரில் இருந்து இறங்கியுள்ளது.
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த ஒரு நபர், அதில் உள்ள பணப் பெட்டியை உடைத்து எடுக்க முயன்றார். ஆனால் முடியாமல் போகவே, வெளியில் இருந்த நபர்களிடம் சொல்லி கயிறைக் கட்டி அதன் மறுமுனையைக் காரில் கட்டி இழுத்துள்ளனர்.
இழுத்த வேகத்தில் இயந்திரம் நகர்ந்தது; அதைக் காரில் ஏற்றிக் கொண்டு அந்தக் கும்பல் பறந்து விட்டது. இந்தக் காட்சிகள் ஏடிஎம் மையத்தின் உள்ளும் வெளியிலும் இருந்த சிசிடிவிக்களில் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகள் வெளியாகி தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடிலாபாத் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அதில், ஏடிஎம் மையத்தில் இருந்து சிறிது துாரத்தில் உள்ள நகைக் கடையில் அதே கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் ஆனால் கதவை உடைக்க முடியாததால் ஏடிஎம் மையத்திற்கு வந்து கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க... மீண்டும் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி - உப்பெனா படத்தின் டிரெய்லர் வெளியீடு!
அடிலாபாத் போலீசார், ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் கயிறு கட்டி அடியோடு பெயர்த்து எடுத்து காரில் கடத்திய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ATM, Crime | குற்றச் செய்திகள், Telangana