• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

Train

Train

30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை அந்த 8 பேரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். இதனை தடுக்க வந்த பயணிகளையும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியால் வெட்டி காயப்படுத்தியிருக்கின்றனர்.

  • Share this:
ஓடும் ரயிலில் கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பல், இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என ஒரு கருத்து உண்டு. கொள்ளை சம்பவங்கள் காரணமாக பயணிகள் அச்சத்தில் இருந்து வந்தனர், ஆனால் ரயில்வே பாதுகாப்பை அதிகரித்து ரயில்வே அமைச்சகம் எடுத்த முயற்சிகளினால் பெருமளவு குற்றங்கள் தடுக்கப்பட்டு பாதுகாப்பானதாக மாறியிருக்கிறது. எனினும் அவ்வப்போது ஏதேனும் சில குற்ற சம்பவங்கள் அதிரவைக்கும் விதமாக அரங்கேறிவிடுகின்றன.

அந்த வகையில் மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் அத்துமீறி நுழைந்த 8 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், ரயிலில் பயணித்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்ததுடன், இளம் பெண் ஒருவரை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். மேலும் தடுக்க வந்தவர்களை கத்தியால் வெட்டியிருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு நேற்றிரவு (அக்டோபர் 8) புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிர மாநிலம் இகாத்புரி எனும் ரயில் நிலையத்தில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், அந்த ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் ஏறியது.

Also Read:  பிரசாந்த் கிஷோர் ட்வீட்டால் வந்த வினை.. மம்தாவை விமர்சித்த காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து திரிணாமுல் பதிலடி!

அந்த கும்பலைச் சேர்ந்த 8 பேரும் ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடித்தனர். பின்னர் அந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை அந்த 8 பேரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். இதனை தடுக்க வந்த பயணிகளையும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியால் வெட்டி காயப்படுத்தியிருக்கின்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் 6 முதல் 8 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் கசரா எனும் ரயில் நிலையத்தை வந்தடைந்த போது அந்த கோச்சில் இருந்த பயணிகள் கத்தி கூச்சல் போட்டு அபயக் குரல் எழுப்பினர், இதனைக் கேட்டு அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்தனர். அங்கு கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவரையும், தப்பிய இருவர் என நால்வரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read:   தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர். இச்சம்பவம் ரயில்வே பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: