• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெள்ளி கொலுசுக்காக கால்களை வெட்டிய திருடன்.. காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த பெண்

வெள்ளி கொலுசுக்காக கால்களை வெட்டிய திருடன்.. காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த பெண்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெள்ளி கொலுசுக்காக பெண்ணின் கால்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ராஜஸ்தானில் 45 வயதுமதிக்கத்தக்க பெண் ஒருவரின் கால்களை துண்டித்துகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் சார்புஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் கன்குபாய் (வயது 45). இவருக்கு திருமணமாகி கணவர் குழந்தைகள் உள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தப்பெண் வயலில் வேலை செய்யும் தனது கணவருக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வயலுக்கு சென்றுள்ளனர். கணவருக்கு உணவு கொடுத்து திரும்பியுள்ளார். வயல் வேலை முடித்து மாலையில் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் கணவன் தன் குழந்தைகளிடம் அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். காலையில் உணவு எடுத்துக்கொண்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். உறவினர்கள் அந்தப்பெண்ணை தேடியுள்ளனர். இரவு முழுவதும் தேடியும் அந்தப்பெண் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் அந்தப்பெண் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது பின்னங்கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மற்றொரு பகுதியில் சடலமாக கிடந்தார். வெட்டப்பட்ட கால்கள் ஒரு பகுதியில் சடலம் மற்றொரு பகுதியிலும் இருந்துள்ளது.

    அவர் காலில் அணிந்திருந்த வெள்ளிக்கொலுசுகள் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாயமான பெண்ணின் உறவினர்களை அழைத்து இறந்தது அந்தப்பெண் தானா என்பதை போலீஸார் உறுதி செய்துக்கொண்டனர்.

    Also Read: பொள்ளாச்சியில் சினிமாவை மிஞ்சிய கார் சேஸிங்.. கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீஸ்

    இதுகுறித்து பேசிய போலீஸார்,” வெள்ளிக்கொலுசுகளுக்காக இந்தக் கொலை நடந்திருக்கிறது. கால்களை வெட்டி கொலுசை திருடிய திருடன் அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக கூறினார்.கடந்த சில வாரங்களுக்கு ஜெய்பூர் பகுதியில் இதேபாணியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: