ஹோம் /நியூஸ் /இந்தியா /

2024க்குள் அமெரிக்காவை விட சிறந்த சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் - அமைச்சர் நிதின் கட்கரி!

2024க்குள் அமெரிக்காவை விட சிறந்த சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் - அமைச்சர் நிதின் கட்கரி!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

2024ஆம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.5 லட்சம் கோடி சாலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்திய சாலை கூட்டமைப்பின் 81ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

  இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.8,000 கோடி மதிப்பிலான சாலை கட்டுமான திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விழாவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். நிகழ்வில் உரையாற்றி கட்கரி நாட்டின் சாலைப் போக்குவரத்து திட்டம் குறித்து பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவித்தார். அவர் பேசுகையில், "ரூ.1,000 கோடி மதிப்பில் 13 ரயில்வே பாலங்கள் அமைக்கவும், ரூ.4,000 கோடியில் விரைவு சாலைகள், நெடுஞ்சாலைகள் அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2024ஆம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.5 லட்சம் கோடி சாலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும்.

  2024ஆம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேசத்தின் சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட சிறப்பானதாக இருக்கும். சாலை போக்குவரத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏதும் இல்லை. எனவே, பாதுகாப்பான, தரமான சாலைகளை அமைத்து பிரதமர் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடைய தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கழிவுகளை கொண்டு சாலைகளை அமைக்கும் திட்டங்களும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

  பொருளாதாரத்துடன் சேர்ந்து நாம் சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, அமைச்சகத்தில் பணியாற்றும் அனைவரும் துரித கதியில், தரமான பாதுகாப்பான சாலைகள் அமைப்பதில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

  இதையும் படிங்க: மொத்த ஊருக்குமே சோலார் பவர்! நாட்டின் முதல் சோலார் கிராமம்! பிரதமர் அறிவித்த குஜராத் வில்லேஜ்!

  2024க்குள் அமெரிக்காவை விட சிறந்த சாலைகளை உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Nitin Gadkari, Uttar pradesh, Yogi adityanath