• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்கக்கூடாது - ஷாகின்பாக் போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்

பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்கக்கூடாது - ஷாகின்பாக் போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்

ஷாகின்பாக் போராட்டம் (கோப்புப்படம்)

ஷாகின்பாக் போராட்டம் (கோப்புப்படம்)

பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்கக்கூடாது என்று ஷாகின்பாக் போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  • Share this:
    போராட்டங்கள் என்ற பெயரில் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஷாகின்பாக் பகுதியில் கடந்தாண்டு டிசம்பரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Also read: 'மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் புறக்கணிப்பு' - மு.க. ஸ்டாலின் கண்டனம்..



    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஷாகின்பாக் போராட்டங்களைப் போல காலவரையின்றி பொது இடங்களை ஆக்கிரமிக்கக்கூடாது என்றனர். மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்தின் பின்னால் அதிகாரிகள் ஒளிந்துகொள்ளாமல், உரிய நடவடிக்கைகளை தாங்களே எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: