ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டதா..? புதுப்பிக்க அவகாசம்...

ஓட்டுநர் உரிமம்

 • Share this:
  பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியவாசிய பணிகளை தவிர அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

  இதனால், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: