Home /News /national /

எம்.எல்.ஏ. ரோஜாவின் கோரிக்கையை ஏற்று சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் 3 மாதத்திற்குள் 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    மோசமான சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக  நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரோஜா புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படாமலேயே, இன்னும் பணிகள் முழுமை அடையாமலேயே சுங்க வரி (Toll Gate )வசூலிக்கப்பட்டு வருகிறது. 2 வருடங்களாக பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்த நான்கு வழி சாலை பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.

    இதுகுறித்து சென்னை ஆலந்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே. ரோஜா கோரிக்கை மனு அளித்தார். மேலும் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய நெடுஞ்சாலைத்றை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வேண்டுகோள் விடுக்கவும் செய்தார்.

    தற்போது இந்த நான்கு வழிச்சாலை கடந்த மழை வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா கேட்டுக் கொண்டதற்கிணங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    இதையும் படிங்க : இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

    ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் 3 மாதத்திற்குள் 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Roja

    அடுத்த செய்தி