Home /News /national /

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் திட்டம்... புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் திட்டம்... புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

பிளாஸ்டிக் சாலைகள் 2,500 கிலோ வரையிலும் எடை தாங்கக் கூடியது. மழையில் உடையாமலும் வெயிலிலும் உருகாமலும் நீடித்து உழைக்கிறது. அதுமட்டுமன்றி தார் குறைக்கப்படுவதால் மறைமுகமாக கார்பன் வெளியீட்டு அளவை குறைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தேசிய மாணவர் படையினரால் ( என் சி சி ) கடற்கரை தூய்மைத் திட்டம் மற்றும் பிற தூய்மைப் பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சாலைகள் அமைப்பதற்காக தேசிய மாணவர் படையும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    என்.சி.சி. தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மைப் பொது மேலாளர் சுசில் குமார் மிஸ்ரா ஆகியோர் நேற்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் லாபகரமாக பயன்படுத்தவும் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களை தேசிய மாணவர்படை அணுகியுள்ளது.

    கரக்பூர் ஐ.ஐ.டி இதற்கு தங்களின் தொழில்நுட்ப ஆலோசனையை வழங்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர தொண்டு நிறுவனங்களையும் என்.சி.சி. அணுகியுள்ளது.

    பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடுகள் மற்றும் இவற்றால் இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்களிடையே இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்தில் 3.4 லட்சம் என்.சி.சி. மாணவர்கள் 127 இடங்களில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் திட்டத்தில் பங்கேற்று 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளனர். சுமார் 17 லட்சம் மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க : ஒரே ஆண்டில் 4 மாணவர்கள் தற்கொலை... விடுதியில் சீலிங் ஃபேன்களை தூக்கும் பிரபல கல்வி நிறுவனம்

    பிளாஸ்டிக் சாலைகள் 2,500 கிலோ வரையிலும் எடை தாங்கக் கூடியது. மழையில் உடையாமலும் வெயிலிலும் உருகாமலும் நீடித்து உழைக்கிறது. அதுமட்டுமன்றி தார் குறைக்கப்படுவதால் மறைமுகமாக கார்பன் வெளியீட்டு அளவை குறைக்கிறது.

    2018-ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி மற்றும் ஜம்மு - காஷ்மீரில், சுமார் 270 கி.மீ. சாலை அமைக்க, பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரத் பகுதியில் 2017 ஜனவரியில் பிளாஸ்டிக் சாலைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

    இதையும் படிங்க : டெல்லி ரோகினி நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்... மத்திய அரசு விஞ்ஞானி கைது

    சென்னையில் நுங்கம்பாக்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, ஹால்ஸ் சாலை, எத்திராஜ் சாலை தெரு மற்றும் சர்தார் படேல் தெரு போன்றவை பிளாஸ்டிக் கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் தூய்மையான நகரம் எனும் பட்டத்தை இரு முறை வென்ற இந்தூர், கடந்த ஆண்டுகளில் 45 கி.மீ நீளமுள்ள சாலைகளை உருவாக்க 5,000 கிலோ கழிவு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : விளையாட்டு நிகழ்ச்சியில் மல்யுத்த வீரரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பாஜக எம்.பி.

    Published by:Musthak
    First published:

    Tags: Plastic Ban

    அடுத்த செய்தி