முகப்பு /செய்தி /இந்தியா / 1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை!

1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

1991ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  பொருளாதார வளர்ச்சிக்கான நமது பாதை மேலும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கு ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்று ம்ன்மோகன் சிங் கூறியுள்ளார்.

  • Last Updated :

கடந்த 1991ஆம் ஆண்டு இருந்ததை விட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய நிதியமைச்சரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், இந்த தாராளமயமாக்கலுக்கு முக்கிய சிற்பியாக விளங்கினார். இந்நிலையில், இந்தியாவில் தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதையொட்டி மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 1991 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்கள் லட்சக்கணக்கான  மக்களை வறுமையிலிருந்து மீட்டு எடுத்தன. தனியார்  நிறுவனங்களின் ஊக்கத்தை கட்டவிழ்த்துவிட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரும் அதேவேளையில், கொரோனா காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தன்னை கவலைகொள்ள செய்வதாகவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள்!

சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை பின் தங்கிவிட்டதாகவும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அவை இல்லை என்றும் தெரிவித்துள்ள மன்மோகன் சிங், ‘இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. கடந்த 1991ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  பொருளாதார வளர்ச்சிக்கான நமது பாதை மேலும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கு ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Must read: எடியூரப்பாவை நீக்க சதி நடக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி!

தாராளமயமாக்கல் மூலம் சில உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டது என்றும் பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் இந்திய பெரிய சக்தியாக உருபெற்றது என்றும் மன்மோகன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் சேரலாம் இல்லனா தனி நாடாகலாம்: காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கானின் புதிய ஆஃபர்!

top videos

    மேலும்,  ‘1991ம் ஆண்டு தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தி ஆற்றிய பட்ஜெட் உரையில் 'ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது' என்ற விக்டர் ஹியூகோவின் வார்த்தைகள் மேற்கொள் காட்டியிருப்பேன். 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ’ தூங்குவதற்கு முன்பாக வைத்திருப்பதற்காக சில வாக்குறுதிகள், செல்வதற்கு சில மைல்கள் உள்ளன’ என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும் ’ என்றும் அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Corona, Indian economy, Manmohan singh