Home /News /national /

பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. லாலு யாதவிற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. லாலு யாதவிற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

லாலு யாதவிற்கு நெருக்கமான கட்சி பிரமுகர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

லாலு யாதவிற்கு நெருக்கமான கட்சி பிரமுகர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

பீகாரில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்விற்கு நெருக்கமான தலைவர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகார் சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்ற கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்துள்ளார். கூட்டணியில் தேஜ்ஸவி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இந்த புதிய கூட்டணி அரசிற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா இருந்துவந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து துணை சபாநாயகராக இருக்கும் மகேஷ்வர் ஹசார் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் பொறுப்பில் இருந்து தொடரவுள்ளார். மதியத்திற்கு பின் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளான இன்று காலை  முதல் லாலு பிரசாத் யாதவ்விற்கு நெருக்கமான ஆர்ஜேடி கட்சி பிரமுகரின் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    2004-2009 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஒருவர் நிலம் வழங்கினால் அவருக்கு இந்திய ரயில்வேயில் அரசு வேலை தரப்படும் என ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆர்ஜேடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் அஷ்பக் கரீம், பயாஸ் அகமது, சட்டப்பேரவை உறுப்பினர் சுனில் சிங் ஆகியோர் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

    சிபிஐ சோதனை தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி கூறுகையில், "இந்த சோதனைக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் பல முறை சந்தித்துள்ளோம். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு தருகிறது. எனவே, நிதீஷ் குமார் தலைமையிலான எங்கள் அரசு வெற்றிகரமாக செயல்படும்" என்றார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, CBI raid, Lalu prasad yadav, Nitish Kumar

    அடுத்த செய்தி