ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவிலான பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளன. உலக நாடுகளில் வாழ்க்கை செலவினம் அதிகரித்துள்ள போதிலும் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பான நிலையில் இருக்கிறது.
வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு என்ற விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் வாழ்க்கை செலவினம் உயர்ந்து வருகிறது. ஆனால், உலக அளவிலான பணவீக்கத்திற்கு மத்தியிலும் இந்தியா சிறப்பான நிலையில் நீடித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு :
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்க்கை செலவீனம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உலக நாடுகளில் வீட்டு செலவுக்கான பட்ஜெட் தொகை மாதத்திற்கு ரூ.100 என்று வைத்துக் கொண்டால் இப்போது ஜெர்மனியில் அது ரூ.120 என்ற அளவிலும், பிரிட்டனில் ரூ.123 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அதிகரித்த செலவினம் என்பது ரூ.12 என்ற அளவில் உள்ளது. ஆகவே, இந்த இரு நாடுகளில் வாழ்க்கைச் செலவினம் ரூ.112 என்ற அளவுக்கு வந்துள்ளதாக வைத்துக் கொள்ளலாம்.
Read More : நடு ராத்திரில நடந்துபோனாலே அபராதம்.. ரூ.3000 ஃபைன் போட்ட போலீஸ்.. ஷாக்கான தம்பதி!
உணவு, உறைவிட செலவுகள் அதிகரிப்பு :
உலக அளவில் உணவு மற்றும் உணவிட செலவுகள் அதிகரித்துள்ளன என்ற போதிலும், இவை இரண்டுமே இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளன என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு வீட்டுக்கான உணவுச் செலவு ரூ.100 என்று வைத்துக் கொண்டால், தற்போது இந்தத் தொகையுடன் அமெரிக்காவில் ரூ.25 , பிரிட்டன் ரூ.18, ஜெர்மனி ரூ.33 என்ற அளவில் செலவு கூடியுள்ளது. அதுவே இந்தியாவை பொருத்தவரையில் இந்த செலவினம் ரூ.15 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இதேபோல மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் உறைவிட செலவுகளும் குறைவாகவே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.100 என்ற அளவில் உறைவிட செலவுகள் ஏற்பட்டதாக வைத்துக் கொண்டால், இப்போது அதனுடன் அமெரிக்காவில் ரூ.21, பிரிட்டனில் ரூ.30, ஜெர்மனியில் ரூ.21 என்ற அளவில் உயர்ந்துள்ள போதிலும், இந்தியாவில் ஏற்கனவே உள்ள செலவுடன் தற்போது ரூ.6 மட்டுமே உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு :
எரிபொருள் விவகாரத்தில் பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒருமாத எரிபொருள் செலவு ரூ.100 என்று வைத்துக் கொண்டால், தற்போது அமெரிக்காவில் ரூ.12, பிரிட்டனில் ரூ.93, ஜெர்மனி ரூ.62 என்ற அளவிலும், இந்தியாவில் ரூ.16 என்ற அளவிலும் கூடுதலான செலவு ஏற்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.