Home /News /national /

பெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

பெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்


பெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

பெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டை சரி செய்வதற்கு நகரத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றும் இதைத் தவிர்த்து வேறு வழியே கிடையாது என்று இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் குழு உறுப்பினர் டாக்டர் யெல்லபா ரெட்டி கூறியுள்ளார்

மேலும் படிக்கவும் ...
பெங்களூரு மாநகராட்சி நகரின் சுற்றுப்புற காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள மென்பொருள் நிறுவனமான அட்டெக்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை சமீபத்தில் ஏற்படுத்தியது. இதன்படி, காற்று சுத்திகரிப்பான்கள் அமைக்கப்பட்டன. அவை அளித்துள்ள ஆய்வக அறிக்கைகளின்படி, நகரத்தின் காற்றில் ஈயம் மற்றும் குரோமியம் போன்ற கன உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நகரத்தில் காற்று சுத்திகரிப்பாளர்களால் சேகரிக்கப்பட்ட வான்வழி தூசியிலிருந்து ஈயம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் குரோமியம் உள்ளிட்ட கன உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அட்டெக்ரானின் நிறுவனர் ராஜீவ் கிருஷ்ணா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கூறிய அவர், நகரத்தில் காற்றில் துகள்களின் செறிவுகளும் அதிகமாக இருந்தன. நாம் சுவாசிக்கும் காற்றில் கன உலோகங்கள் இருப்பதால், இது மனிதர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

ஆய்வக சோதனை அறிக்கையின்படி, ஹட்சன் பகுதியில் அமைந்துள்ள காற்று சுத்திகரிப்பாளரின் முதன்மை வடிகட்டி எட்டு மணி நேரத்தில் சுமார் 19 கிராம் தூசியை சேகரித்துள்ளது. இவை, வான்வழி தூசி, துகள்கள், கருப்பு கார்பன் மற்றும் கன உலோகங்களை உள்ளடக்கியுள்ளன, அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும், 800 கிராம் முதல் ஒரு கிலோ தூசி வரை காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தால் சேகரிக்கப்படுகிறது.

காற்றில் இந்த கனரக துகள்களின் அளவு 10 மைக்ரோ கிராம் வரையில் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்துள்ளது. இதற்கு மாற்றமாக வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த எட்டு மணி நேரத்தில் சேகரிக்கப்பட்ட PM2.5 -ல் சுமார் 48 மைக்ரோ கிராம் அளவுக்கு மாசு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர் டி.வி ராமச்சந்திரா கூறும்போது, பெங்களூரில் குப்பை எரிப்பது, அதிகப்படியான போக்குவரத்து பயன்பாடு மற்றும் தொழில்துறை கழிவுகள் ஆகியவை காற்றை மாசுபடுத்தும் ஏரோசோல்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை குரோமியம், தாமிரம், பாதரசம் மற்றும் காற்றில் ஈயம் போன்ற கன உலோகங்களை வெளியிடுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், PM2.5 மற்றும் PM10 இன் மதிப்புகள் WHO நிர்ணயித்த உச்ச வரம்புகளை விட எட்டு மடங்கு அதிகம் என்றும் இதனால் கடுமையான சுகாதார விளைவுகள் ஏற்படும் . " ஆய்வின் முடிவுகள் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு குறைக்கப்படுவதாகக் கூறுவதை ஒரு மோசடி என்று உறுதிப்படுத்துகிறது" என்றார்.

அறிவியல் ஆன்மீக மையத்தின் குழந்தை மருத்துவரான டாக்டர் சஷிதரங்கங்கையா இது குறித்து கூறும்போது,
ஈயம், துத்தநாகம், பாதரசம், ஆர்சனிக் மற்றும் குரோமியம் போன்ற கன உலோகங்கள் காற்றில் கலந்திருந்து, அதனை சுவாசிக்கும்போது ஒரு குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்று குழந்தை மருத்துவரான டாக்டர் சஷிதரங்கங்கையா தெரிவித்துள்ளார். குப்பைகளை எரிப்பதால், கனரக உலோகங்கள் எரிந்தால் டையாக்ஸின் போன்ற நச்சு வாயுக்களும் வெளியேறக்கூடும். இந்த வாயுக்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தூய மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியின் சர்வதேச இதழ் (ஐ.ஜே.பி.ஆர்) நடத்திய ஆய்வில் பெங்களூருவில் மாசுபட்டுள்ள காற்றில் கனரக உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கனரக உலோகமான துத்தநாகம் முக்கிய பங்கு வகிப்பதால், இது மனித உடலுக்கு மிக பெரிய கேடு அளிக்கிறது. மேலும் உடற்கூறு கட்டமைப்பிணையும் பாதிக்கிறது. அதேபோல் மனிதர்களுக்கு மட்டுமின்றி சுற்று சூழலுக்கு தூத்தநாகம் அபாயகரமானதாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கின்றன.

மற்றொரு கனரக உலோகமான காட்மியம் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றன. இதனால் மறைமுகமாக சத்து குறைபாடுகள் தூண்டப்படுகின்றன. மாங்கனீசு என்ற சுற்றுச்சூழலில் ஆதிக எண்ணிக்கையில் காணப்பட்டாலும், அதில் நச்சுத்தன்மை இல்லாததால் மிகக் குறைவான பாதிப்புகளையே அது ஏற்படுத்துகிறது.

இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் குழு உறுப்பினர் டாக்டர் யெல்லபா ரெட்டி கூறுகையில், கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரு நகரில் காற்று மாசுபாடு குறித்து இதுவரை மறைத்து வைத்திருந்த புள்ளி விபரங்களை தற்போது காற்று சுத்திகரிப்பாளர்கள் வழங்கி இருக்கின்றனர். மாசுபடுத்திகளின் உண்மையான புள்ளி விபரங்கள் காற்று சுத்திகரிப்பாளர்கள் காட்டியுள்ளது. இதன் மூலம் உண்மை தகவல் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ஈயம் மற்றும் துத்தநாகம் போன்ற கன உலோகங்கள் மனித மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு அல்லாமல் பெங்களூருவில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள் மற்றும் மண்ணையும் பாதிக்கின்றன என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். காற்று மாசுபாட்டை சரி செய்வதற்கு நகரத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றும் இதைத் தவிர்த்து வேறு வழியே கிடையாது என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Air pollution, Bengaluru

அடுத்த செய்தி