• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏன் - பின்னணி

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏன் - பின்னணி

Yogi adityanath

Yogi adityanath

யோகிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பிரதமர் மோடிக்கு அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதுடன், யோகிக்கு கட்சியில் இருக்கும் எதிர்காலத்தையும் காட்டியுள்ளது.

  • Share this:
கொரோனா பரவலுக்கு பின்னர் முதல் முறையாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று காணொளி காட்சிக்கு பதிலாக நேரடியாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, ஜே.பி.நட்டா உட்பட 124 தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இது தவிர பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில பாஜக தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கின்றனர்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் நேரடியாக கலந்து கொண்டது சஸ்பென்ஸாக அமைந்துள்ளது. அவர் லக்னோவில் இருந்து காணொளி காட்சி மூலம் தான் கலந்து கொள்வதாக இருந்தது. அப்படியிருக்க பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யோகி நேரடியாக கலந்து கொண்டது கட்சியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இன்றைய கூட்டத்தில் அரசியல் தீர்மானங்களை முன்மொழியும் பணியை யோகி ஆதித்யநாத் மேற்கொள்கிறார்.

Also read:  மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

2017, 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்கும் பணியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தார். இந்த அளவுக்கு முக்கியத்துவத்தை யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக மேலிடம் வழங்கியிருப்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் யோகிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பிரதமர் மோடிக்கு அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதுடன், யோகிக்கு கட்சியில் இருக்கும் எதிர்காலத்தையும் காட்டியுள்ளது.

சமீபத்தில் அமித்ஷா லக்னோ சென்றிருந்த போது, 2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நீங்கள் விரும்பினால் 2022ல் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்து அவரை முதல்வராக்க வேண்டும் என பேசினார். இதன் மூலம் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் தான் உத்தரப்பிரதேச தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருப்பது என்பதும் தெளிவாகி உள்ளது.

Also read: பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

யோகி ஆதித்யநாத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, “அவர் பாராளுமன்றத்தில் சீனியர் எம்.பியாக இருந்தவர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். கொரோனா பேரிடரை அவர் சிறப்பாக கையாண்டது அனைவருக்கும் தெரியும், வேலையிழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். அவரை நாங்கள் தேர்வு செய்ததில் என்ன வியப்பு இருக்கிறது என அவர் பதிலளித்தார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும், குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆண்டின் இறுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் பாஜகா ஆட்சி நடைபெற்று வருவதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: