புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுபாட்டை புதுச்சேரி அரசு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை ராஜ்நிவாசில் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் சனி, ஞாயிறு கிழமைகளில் விதித்த முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒத்துழைப்பு கொடுத்த புதுச்சேரி மக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கூட்டத்தில் நன்றி தெரிவித்தார். புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுபாட்டை அதிகரிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி மக்கள் கூட்ட நெரிலை தடுக்க நடைமுறையில் உள்ள ஊடரங்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்படுகிறது.
கோயில்களில் பொது வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தேனீர் கடைகள், மதுக்கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், வணிக வளாகம்,உடற்பயிற்சி கூடும்,சலூன்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. துக்க நிகழ்வுகளில் 25 பேர் மட்டும் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மளிகை காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. கார் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு
பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு முகாம்கள் மூலமாக கொரோனா
பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, கெரோனா பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்தி அதன் மூலம் பரவலை உடனுக்குடன் கட்டுப்படுத்துவது, அதற்காக மருத்துவப் பணியாளர்களை அதிகம் ஈடுபடுத்துவது, மருத்துவ மேலாண்மையை மேம்படுத்துவது, எதிர்வரும் சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் பிராணவாயு படுக்கைகளை மேலும் அதிகப்படுத்துவது, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கூடுதலாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பது, கொரோனா இறப்புகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை
தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவது, மருத்துவ
கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது மற்றும் அவர்கள் சுமையின்றி பணியாற்றுவதை உறுதி செய்வது, மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவுள்ளதால் அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.