Home /News /national /

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 1.5 கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி..!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 1.5 கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி..!

திருப்பதிக்கு ரூ.1.5 கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி

திருப்பதிக்கு ரூ.1.5 கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த ரிலையனஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி காணிக்கை வழங்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirumala, India
    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இன்று காலை வருங்கால மருமகள் ராதிகாவுடன் ஏழுமலையான் அபிஷேக சேவையில் பங்கேற்றார். கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வேத பண்டிதர்கள் வேதம் முழங்கி ஆசி வழங்கினர்.தொடர்ந்து அவர் தேவஸ்தானம் இஓவிடம் ரூ.1.5 கோடி கணிக்கையை டிடி ஆக வழங்கினார்.

    சுவாமி தரிசனத்திற்குப் பின் கோசாலை நிர்வாகத்தை சந்தித்த முகேஷ் அம்பானி, அவர்களிடம் சிறிது நேரம் பேசி தங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.அங்கிருந்த லட்சுமி மற்றும் பத்மாவதி என்ற இரு யானைகளிடம் முகேஷ் அம்பானி ஆசி பெற்றார். கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் சிறப்பான வரவேற்பு தந்தனர்.

    திருப்பதி எம்பி விஜயசாய் ரெட்டி, எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோரும் முகேஷ் அம்பானியுடன் இருந்தனர். கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் அம்பானி, ஏழுமலையானின் ஆசி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அத்துடன் திருமலை திருப்பதி இந்திய மக்களின் பெருமை மிகு சின்னம் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: 75,500 கிலோ திருப்பதி முடி காணிக்கை..! - ஏலம் மூலம் ரூ.27.66 கோடி வசூல்

    தரிசனம் முடித்த பின்னர் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை திரும்பினார் முகேஷ் அம்பானி.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mukesh ambani, Tirumala, Tirumala Tirupati

    அடுத்த செய்தி