ஹோம் /நியூஸ் /இந்தியா /

விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு பார்படாஸ் பிரதமர் நன்றி

விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு பார்படாஸ் பிரதமர் நன்றி

ரிஹானா.

ரிஹானா.

இந்நிலையில் ரிஹானாவின் நாடான பார்படாஸுக்கு அந்நாட்டு பிரதமர் மியா அமோர் மோட்லி விடுத்த வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானத்துடன் 1 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸ் நாட்டைச் சேர்ந்தவர் பாப் பாடகி ரிஹானா. இவர் சமீபத்தில் புதுடெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்து வெளியிட்டார்.

  இதனையடுத்து அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் இங்கு எதிர்ப்புகள் கிளம்பின, கிரிக்கெட் வீரர்கள் முதல் நடிகை கங்கனா ரணாவத் வரை அனைவரும் ரிஹானாவை கடுமையாக விமர்சித்தனர்.

  ரிஹானா மட்டுமல்ல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், போர்ன் நடிகை மியா கலீபா ஆகியோருக்கும் கடும் கண்டனங்கள் இங்கு குவிந்தன. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட உலக நாடுகளைத் தூண்டிவிடும் இந்தப் பதிவு குறித்து இந்தி நடிகை கங்கனா ரனாவத் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். ரிஹானாவின் செயல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருதப்பட்டது.

  இந்நிலையில் ரிஹானாவின் நாடான பார்படாஸுக்கு அந்நாட்டு பிரதமர் மியா அமோர் மோட்லி விடுத்த வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானத்துடன் 1 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் இந்தச் செயல் உலக நாடுகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

  இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு பார்படாஸ் பிரதமர் மோட்லி நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் , “கோவிஷீல்டு தடுப்பூசிகளை தாராளமாக நன்கொடையாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும், எனது அரசு சார்பாகவும் பார்படாஸ் மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

  இதற்கிடையே ரிஹானாவுக்கு காலிஸ்தான் தொடர்புடைய பொதுத்தொடர்பு நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் டாலர்கள் கொடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கூறியதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona vaccine, Modi, Rihanna