• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நல்லது செய்தால் வெறுப்பதா? CAA- எதிர்ப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

நல்லது செய்தால் வெறுப்பதா? CAA- எதிர்ப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி.

  • Share this:
    உலக நாடுகளில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்காக பரிந்து பேசும் எதிர்க்கட்சிகள், இந்தியாவில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசின் முடிவை வெறுப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளில் பொருளாதார நிலை சிக்கலில் இருப்பதாக குறிப்பிட்டார். அடித்தளத்தில் வலிமையுடன் இருக்கும் இந்திய பொருளாதாரமும், அதன் கொள்கைகளும் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    Also read...கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு - 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

    உலகம் முழுவதும் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், இந்தியாவில், அண்டைநாடுகளில் இருந்து விரட்டப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார்.

    அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசுபவர்கள், ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அரசியல்சாசனம் அமல்படுத்தப்பட்டதை எதிர்ப்பதாகவும் மோடி கடுமையாக சாடினார்.

    Also read...நித்யானந்தாவின் சீடர் தற்கொலை - தூக்குக் கயிறுடன் பகீர் வாக்குமூலம்

    நல்லதை பற்றி பேசுவதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, ஆனால், அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் அரசை வெறுப்பதாகவும் குறைகூறினார். மேலும், பாலின சமத்துவத்தை வலியுறுத்துபவர்கள் முத்தலாக் தடை சட்டத்தை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: