அவுரங்காபாத் நகரின் பெயர் மாற்ற விவகாரம்: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் மனக்கசப்பு

அவுரங்காபாத் நகரின் பெயர் மாற்ற விவகாரம்: மகாராஷ்டிராவில் ஆளும்  கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் மனக்கசப்பு

அவுரங்காபாத் என்பதற்கு பதிலாக சம்பாஜிநகர் எனவும் அவுரங்காபாத்தை அடைப்புக்குறிக்குள் பதிவிட்டிருந்தது அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அவுரங்காபாத் என்பதற்கு பதிலாக சம்பாஜிநகர் எனவும் அவுரங்காபாத்தை அடைப்புக்குறிக்குள் பதிவிட்டிருந்தது அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும்  தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சி செய்து வருகின்றன. பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த சிவசேனா, தனக்கு முற்றிலும் நேரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளதால் அங்கு அவ்வப்போது கருத்து மோதல்கள், குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவுரங்காபாத் நகரை பெயர் மாற்றும் விவகாரம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முன்னர் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா தற்போதும் அவுரங்காபாத்தை, சம்பாஜிநகர் என பெயர் மாற்றம் செய்வதில் முனைப்பாக உள்ளது. அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே சமீபத்தில்
மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மஹாராஜ் விமான நிலையம் என மாற்ற வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.அதே நேரத்தில் சிவசேனாவின் முந்தைய நிலைப்பாடான
அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என பெயர் மாற்றும் விவகாரத்தில் அக்கட்சியின் நிலை குறித்து பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி விமர்சித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவுரங்காபாத் நகரை பெயர் மாற்றும் நடவடிக்கைகளில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஈடுபட்டார்.

இதனிடையே அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 165 படுக்கைகள் சேர்ப்பது மற்றும் 360 பணியிடங்கள் உருவாக்குவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவுரங்காபாத் என்பதற்கு பதிலாக சம்பாஜிநகர் எனவும்
அவுரங்காபாத்தை அடைப்புக்குறிக்குள் பதிவிட்டிருந்ததும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப்
தோரட் முதலமைச்சரின் ட்வீட் தொடர்பாக பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டிருந்த ட்வீட்டில், நகரங்களின் பெயர்களை மாற்றம் செய்வது என்பது பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் கிடையாது. பெயர் மாற்றத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என
குறிப்பிட்டிருந்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் என்பதுடன் மாநில அமைச்சராகவும் இருக்கும் பாலாசாகேப் தோரட் தனது பதிவில் சத்ரபதி சிவாஜி எங்களின் மதிப்புக்குரியவர், அவரின் பெயரால் அரசியலில் ஈடுபடவேண்டாம், அனைவரும் இணைந்து அவுரங்காபாத்தின்
முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என
வலியுறுத்தியுள்ளார்.

அவுரங்காபாத்தின் பெயர் மாற்ற விவகாரம் என்பது 20  ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. 1995ல்  அவுரங்காபாத் மாநகராட்சியில் பெயர் மாற்றம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதனை எதிர்த்து காங்கிரஸ் கவுன்சிலர் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: