• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'ரூ.3 கோடி வரி செலுத்துங்கள்': ரிக்‌ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!

'ரூ.3 கோடி வரி செலுத்துங்கள்': ரிக்‌ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!

ரிக்‌ஷா ஓட்டுநர்

ரிக்‌ஷா ஓட்டுநர்

யாரோ ஒரு நபர் தான் வியாபாரம் செய்வதற்காக பிரதாப் சிங் பெயரில் ஜி.எஸ்.டி எண்ணை பெற்றுள்ளது, அதன் மூலம் அவர் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வர்த்தகம் செய்திருப்பதகாவும் போலீஸ் விசாரணையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ரிக்‌ஷா ஒட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசம், மதுரா மாவட்டத்தில் உள்ள பகல்பூர் பகுதியின் அமர் காலனியில் வசித்து வருபவர்  பிரதாப் சிங், ரிக்‌ஷா ஓட்டுநரான இவருக்கு ரூ. 3 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைவே காவல் நிலையத்தில்  பிரதாப் சிங் புகார் அளித்துள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கி பிரதாப் சிங் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    அதில்,  வங்கியிலிருந்து பான் கார்டு கேட்டதால், கடந்த மார்ச் மாதம் பிரதாப் பகல்பூர் பகுதியில் இயங்கிவரும் ஜன் சுவிதா கேந்திராவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.  உண்மையான பான் கார்டுக்குபதிலாக நகல் பான்கார்டு கிடைத்துள்ளது.  படிப்பறிவு இல்லாததால் உண்மையான பான் கார்டுக்கும் நகல் பான் கார்டுக்கு அவரால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், ரூ.3,47,54,896  வருமான வரி செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவில் வெறுப்பு பேச்சு, வன்முறை கொண்டாட்டங்களை தூண்டும் பதிவுகள்: கட்டுப்படுத்த திணறும் ஃபேஸ்புக்!


    யாரோ ஒரு நபர் தான் வியாபாரம் செய்வதற்காக பிரதாப் சிங் பெயரில் ஜி.எஸ்.டி எண்ணை பெற்றுள்ளதும், அதன் மூலம் அவர் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வர்த்தகம் செய்திருப்பதகாவும் போலீஸ் விசாரணையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும்,  பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல்நிலைய தலைமை அதிகாரி அனுஜ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: கங்கை நதி நீரின் தரம் உயர்ந்தது: தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் தலைவர் தகவல்!



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: