Home /News /national /

காங்கிரசுக்கு புத்துயிரூட்டுவது கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் அவசியம்: சோனியா காந்தி

காங்கிரசுக்கு புத்துயிரூட்டுவது கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் அவசியம்: சோனியா காந்தி

கட்சிக்கு கடும் சவால் காத்திருப்பதாகவும்,  இந்த சோதனையான காலகட்டத்தில் அர்ப்பணிப்பும், மன உறுதியும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

கட்சிக்கு கடும் சவால் காத்திருப்பதாகவும்,  இந்த சோதனையான காலகட்டத்தில் அர்ப்பணிப்பும், மன உறுதியும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

கட்சிக்கு கடும் சவால் காத்திருப்பதாகவும்,  இந்த சோதனையான காலகட்டத்தில் அர்ப்பணிப்பும், மன உறுதியும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

    காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி என்பது கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் அவசியம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கட்சிக்கு கடும் சவால் காத்திருப்பதாகவும்,  இந்த சோதனையான காலகட்டத்தில் அர்ப்பணிப்பும், மன உறுதியும் தேவை என்றும் வலியுறுத்தினார். அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை அவசியம் என்றும் அதற்கு தேவையானவற்றை தான் உறுதி செய்வதாகவும் அவர் கூறினார். காங்கிரசுக்கு புத்துயிரூட்டுவது கட்சிக்கு மட்டுமின்றி நாட்டின் ஜனநாயகத்துக்கும் அவசியம் என்றும் சோனியா கூறினார்.

    பெண் குழந்தை பிறந்த உற்சாகம்.. ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் - வீடியோ!!

    பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கையை கடுமையாக சாடிய சோனியா காந்தி, பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தை, வளப்படுத்தி வரும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது, என்றும் கூறினார்.

    வரலாற்றை பாஜக "தவறான முறையில்" திரித்து வருவதாக குற்றம் சாட்டிய சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர்கள் பிளவுபடுத்தும் யுத்தியை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவதாக சாடினார். அத்தகைய அச்சுறுத்தல்கள் எதிர்க்கட்சிகளை பயமுறுத்தவோ அமைதிப்படுத்தவோ முடியாது. என்றும் அவர் கூறினார்.

    முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை, அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதாக விமர்சித்த அவர்,  நாட்டின் அரிய சொத்துக்களை விற்பது, பணமதிப்பிழப்பு போன்ற ஒரு பேரழிவாக மாறும் என்றும் எச்சரித்தார். சொத்து பணமாக்குதல்' என்ற ஆடம்பரமான பெயரில் அவை விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு பொதுத் துறை நிறுவனங்களே வேலைவாய்ப்பினை அளித்துவருவதாக சோனியா தெரிவித்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Sonia Gandhi

    அடுத்த செய்தி