குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் கடமை என்று, ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பை காப்பது நீதிமன்றத்தின் கடமை. இணையதளம் என்பதும் கருத்துரிமையின் ஒருபகுதியே. மிக மிக அசாதரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.
காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது. 7 நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.