• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஏப்பம் விட்ட கில்லாடி விஏஓ.. குடும்பத்தையே கூண்டோடு கைது செய்த சிஐடி போலீஸார்

2000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஏப்பம் விட்ட கில்லாடி விஏஓ.. குடும்பத்தையே கூண்டோடு கைது செய்த சிஐடி போலீஸார்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

போலி ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Share this:
     தாசில்தார் உதவியுடன் 2000 கோடி அரசு நிலத்தை அபகரித்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் அவருடைய மகன் ஆகியோர் உட்பட உட்பட 5 பேரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.

    சித்தூர் மாவட்டம் சோமலா அடுத்த உப்பரபள்ளியில் கடந்த 2020ம் ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி 459 சர்வே எண்ணில் 45.42 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முறைகேடு செய்ததாக தாசில்தார்  ஷாம் பிரசாத் சோமலா போலீசில் புகார் அளித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் , அவரது மகன்கள்,மகள்கள் ஆகியோர் உப்பரபள்ளி தாசில்தாராக இருந்த ஸ்ரீதேவி உதவியுடன் போலி ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தாசில்தார் ஸ்ரீதேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    இந்நிலையில் திருப்பதி அடுத்த ஏர்பேடு அருகே உள்ள அரசு நிலத்தை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் அவரது மகன்கள்,மகள்கள் ஆகியோர் ஆக்கிரமித்து போலி ஆவணங்களை தயார் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வேறு ஒருவருக்கு ₹ 50 லட்சத்திற்கு விற்க முயன்றுள்ளனர். வாங்க இருந்தவர் ரூ 5 லட்சம் முன் பணம் கொடுக்க ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு  சந்தேகம் ஏற்பட்டு விசாரணை செய்தார்.அப்போது அவர்கள் அரசு நிலத்தை முறைகேடாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய முன் வந்தது தெரியவந்தது. எனவே இந்த மோசடி பற்றி அவர் மீது ஏர்பேடு போலீசில் புகார் அளித்தார்.  தொடர்ந்து இந்த மெகா மோசடி பற்றி சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் ஆதாரமாக சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 மண்டலங்களில். கடந்த நவம்பர் மாதம் 2,320 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் அவரதுமகன்கள் மதுசூதனன், ராஜன், ரமணா மற்றும் மகள் கோமலா ஆகியோர் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஐந்து பேரையும் சிஐடி போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷின் மகள் தரணியை போலீசார் தேடி வருகின்றனர். கணேஷ் அவருடைய குடும்பத்தினர் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி ஒரேநாளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி 93 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்த அரசு நிலம் மொத்தமாக மீட்கப்பட்டது. அந்த நிலத்தின் தற்போதைய மார்க்கெட்  மதிப்பு ₹2000 கோடிக்கு மேல் இருக்கும் என திருப்பதி சிஐடி டிஎஸ்பி ரவிக்குமார் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: