ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரானார் ஹிஜாப் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த ரிதுராஜ்!

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரானார் ஹிஜாப் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த ரிதுராஜ்!

ரிதுராஜ் அவஸ்தி

ரிதுராஜ் அவஸ்தி

ஓய்வுபெற்ற நீதிபதி ரிதுராஜ், கடந்த அக்டோபர் 11, 2021ஆம் தேதி முதல் ஜூலை 2, 2022 வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஓய்வுபெற்ற கர்நாடக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய சட்ட மற்றும் நீதி துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற கர்நாடக தலைமை நீதிபதி ரிதுராஜ்-ஐ நியமனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக நீதிபதி கே.டி சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம். கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ரிதுராஜ், கடந்த அக்டோபர் 11, 2021ஆம் தேதி முதல் ஜூலை 2, 2022 வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அதற்கு முன்னர் 2009 முதல் 2021 வரை அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். இவர் கர்நாடக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், தற்போது நீதிபதி ரிதுராஜ் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணையம் மத்திய அரசிற்கு சட்ட சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகளை வழங்கும்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: High court, Hijab, Karnataka