ஹோம் /நியூஸ் /இந்தியா /

வன்கொடுமை.. ஆபாசப்படம்.. போக்சோ வழக்குகளுக்கு நீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து!

வன்கொடுமை.. ஆபாசப்படம்.. போக்சோ வழக்குகளுக்கு நீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து!

போஸ்கோ வயது வரம்பு..

போஸ்கோ வயது வரம்பு..

போக்சோ மற்றும் ஐபிசி பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளைஞர்கள் பல குற்றங்களைச் செய்வதாக உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka |

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ் மற்றும் ஜி.பசவராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நவம்பர் 5ஆம் தேதி அளித்த தீர்ப்பில், “16 வயதுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை காதலித்து, ஓடிப்போய், உடலுறவில் ஈடுபட்டது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுபோன்ற வழக்குகளின் அடிப்படை உண்மைகளை கருத்தில் கொள்ள, இந்திய சட்ட ஆணையம் வயது வரம்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

போக்சோ சட்டம் :

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசப் படங்கள் போன்ற குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதையும், விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதையும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: உலகின் 3ஆவது பெரிய மெட்ரோ சேவையாக இந்தியா முன்னேறும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்

இச்சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும்  அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.

போக்சோ குற்றவாளியை விடுவித்ததை எதிர்த்து போலீசார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. 2017 ஆம் ஆண்டு 17 வயதுடைய சிறுமி, சிறுவனுடன் வீட்டை விட்டுச் சென்றது கண்டறியப்பட்டது. சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த போதிலும், சாட்சிகள் அனைவரும் எதிராக மாறிவிட்டனர்.

வழக்கு தொடர்ந்த நிலையில், இருவருக்கும் திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது விடுதலையை உறுதி செய்த நீதிமன்றம், சட்ட ஆணையம் மற்றும் கர்நாடகா கல்வித் துறைக்கு இந்த புதிய உத்தரவை பிறப்பித்தது.

இதையும் படிங்க ; கழிவறையைவிட இங்குதான் பாக்டீரியா அதிகம் : செல்போன் பயனர்களுக்கு ‘ஷாக்’ தந்த ஆய்வு முடிவு!

போக்சோ மற்றும் ஐபிசி பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளைஞர்கள் பல குற்றங்களைச் செய்வதாக உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.

“மேற்கூறிய பல குற்றங்கள், மைனர் பெண் மற்றும் பையனின் அறிவின்மையின் விளைவாக அல்லது காரணமாக செய்யப்பட்ட குற்றங்களாகக் காணப்படுகிறது. பல சமயங்களில் சம்பந்தப்பட்ட பையனும் பெண்ணும் நெருங்கிய தொடர்புடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாகவோ வகுப்புத் தோழர்களாகவோ இருக்கிறார்கள்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

சட்டம் பற்றிய அறிவு இல்லாதது குற்றம் செய்ய ஒரு காரணமல்ல என்றாலும், போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. "குறிப்பாக IX வகுப்பு முதல் உள்ள மாணவர்கள், போக்சோ சட்டத்தின் அம்சங்கள், போக்சோ சட்டத்தின் கீழ் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் செயல்கள் குறித்து கல்வி கற்பது அவசியம் " என்று அது கூறியது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Karnataka, Law