Home /News /national /

மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்: பங்குச் சந்தையில் ஏறுமுகம் காட்டிய யெஸ் வங்கி

மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்: பங்குச் சந்தையில் ஏறுமுகம் காட்டிய யெஸ் வங்கி

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

நாடு முழுவதும் உள்ள 1,132 யெஸ் வங்கியின் கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இது மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.

    நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 3ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தொடங்கி, தனியார் வங்கிகள் பலவும், யெஸ் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய முன்வந்தன.

    இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் 18ம் தேதி மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று மாலை 6 மணி முதல் நீக்கப்பட்டன.

    இனி, யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வழக்கம் போல், தேவைக்கு எடுத்து கொள்ளலாம். இணையம் மூலமாக, NEFT, IMPS, RTGS பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இணைய சேவை மூலம் யெஸ் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப மட்டுமே முடியும் என்று இருந்த நிலையில், தற்போது யெஸ் வங்கி கணக்கில் இருந்தும் பணத்தை அனுப்பலாம்.

    யெஸ் வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்களின் பணம் பாதுக்காப்பாக இருப்பதாகவும், டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் தர போதுமான கையிருப்பு இருப்பதாகவும் யெஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த குமார் தெரிவித்துள்ளார். அனைத்து யெஸ் வங்கி ஏடிஎம்களிலும் முழுமையாக பணம் நிரப்பப்பட்டுள்ளதாகவும் 19ம் தேதி காலை முதல், நாடு முழுவதும் உள்ள 1,132 யெஸ் வங்கியின் கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யெஸ் வங்கிக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இவ்வங்கியின் தரத்தை மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தைகள் சரிந்து இருந்தாலும், யெஸ் வங்கியின் பங்குகள் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ளது.

    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: Yes Bank

    அடுத்த செய்தி