கொரோனா பரவல்: மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

பணியாளர்கள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி, துணை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள், அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் தினமும் அலுவலகம் வரவேண்டும். துணை செயலாளருக்கு குறைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 சதவீதத்தினருக்கே அனுமதி அளிக்கப்படும்.

  மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம். ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுக்க 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30-6 மணி, 10 - 6.30 மணி என மாற்று பணி நேரம் வழங்க வேண்டும்.

  அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள் எப்போதும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் வேண்டும்.

  இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ள மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இது வருகிற 30ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.இந்த வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்றும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  Must Read :  நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

   

  இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: