உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல்களில், ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் நிலையில் அது அமலாவதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட சேவை வரி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. நாடாளுமன்றத்திலும் இந்த புகார் எதிரொலித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சேவை வரி செலுத்தும்படி வாடிக்கையாளர்களை ஓட்டல்களும், உணவங்களும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் வேறு எந்த வடிவிலும் சேவை வரி வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
சேவைக் கட்டணம் தருவதும் தராததும் வாடிக்கையாளரின் விருப்பம் என்றும் உணவின் விலையை தவிர்த்து கூடுதலாக வேறு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உணவுக்கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி.,விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை தனியாக வசூலிக்க முடியாது. மேற்கண்ட நிறுவனங்கள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.
இதை ஓட்டல்கள் மீறினால் 1915 என்ற தொலைபேசி எண்ணிலோ NCH என்ற செயலியிலோ புகார் கூறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.