கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் - அதிரடி காட்டிய சபாநாயகர்

மற்ற 14 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை ஏற்பதா அல்லது தகுதிநீக்கம் செய்வதா என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் - அதிரடி காட்டிய சபாநாயகர்
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்
  • News18
  • Last Updated: July 26, 2019, 9:16 AM IST
  • Share this:
கர்நாடகாவில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள 14 எம்.எல்.ஏ.க்களின் விவகாரங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் முடிவுசெய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். மேலும், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர்.

கடும் இழுபறிக்கு மத்தியில், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியது. கொறடா உத்தரவை மீறி, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.


இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், சுயேச்சை எம்.எல்.ஏ சங்கரை தகுதிநீக்கம் செய்வதாகத் தெரிவித்தார். கே.பி.ஜே.பி கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஆர்.சங்கர், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியதால் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் மகேஷ் குமட்ஹல்லி ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று பேரின் ராஜினாமா கடிதங்களும் தாமாக முன்வந்து வழங்கப்பட்டதாகவோ, நேர்மையானதாகவோ இல்லை என்பதால், அதனை நிராகரித்துவிட்டதாக அவர் கூறினார். இந்த 3 பேரும், தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும்வரை, தேர்தலில் போட்டியிடவோ, தேர்வு செய்யப்படவோ முடியாது.மேலும், மற்ற 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை ஏற்பதா அல்லது தகுதிநீக்கம் செய்வதா என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றுள்ளார். அதேநேரம், தற்போதைய அரசியல் சூழலில் யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்று காபந்து முதலமைச்சரான குமாரசாமி தெரிவித்துள்ளார்.இதனிடையே, டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Also see... ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading