டெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..! நெகிழவைக்கும் வீடியோ

டெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..! நெகிழவைக்கும் வீடியோ
  • Share this:
டெல்லியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் வடகிழக்கு டெல்லியில் உள்ள யமுனா விஹாரில் பள்ளி மாணவியர்களை பொதுமக்கள் மனிதசங்கிலி அமைத்து அழைத்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறிஉள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 11 காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதையடுத்து, வடகிழக்கு டெல்லியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆர்பாட்டத்தினால் ஏற்பட்ட வன்முறையின் போது முனா விஹாரில் பள்ளி மாணவியர்களை பொதுமக்கள் மனிதசங்கிலி அமைத்து அழைத்து சென்றுள்ளனர்.இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர், போலீசார் யாரும் இல்லை, காப்பாற்ற எந்த சக்தியும் இல்லை. அவர்கள் தற்போது சொந்த பாதுகாப்பில் உள்ளனர் என்றுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலர் இந்தியாவில் பொதுமக்களிடம் மனிதம் மறையவில்லை என்பதற்கு இது ஒரு சான்று என்று பதிவிட்டுள்ளனர்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்