பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக திகழ்ந்து வருகிறது. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது யூனியன் பிரதேசமான புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிராக இணைப்பு எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அரசியல்கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனால் இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோரிக்கை எழுந்தது. இதற்காக தனி அமைப்பை உருவாக்கியும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது காரைக்காலை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் எனக்கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் பிரதான சாலைகளில், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டியில் “அசிங்கம், அவமானம், வெட்கம், புதுச்சேரி அரசே நாங்கள் என்ன அநாதைகளா? என தலைப்பிட்டு, காரைக்கால் மக்களுக்கு காலம்காலமாக எந்தவித அரசு நலத்திட்டங்களும் வழங்காத அரசை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரைக்காலை தமிழ்நாட்டோடு இணைப்போம். பொது வாக்கெடுப்பு நடத்த புதுச்சேரி அரசே தயாரா?” என கேள்வி எழுப்பி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

பரபரப்பு போஸ்டர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சுவரொட்டி விவகாரம் பிரதமர் காணொலியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் எதிரொலித்தது. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் காணொலியில் கலந்துரையாடினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன், காரைக்கால் சுவரொட்டியை குறிப்பிட்டு எந்த காலத்திலும் புதுச்சேரியின் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படாது என உறுதியளித்தார்.
Must Read : புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு... அங்கன்வாடி உணவு காரணமா? - அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு
மத்திய அரசின் திட்டத்தின் மூலம் புதுச்சேரி பல புதுமைகளைகாண உள்ளது. இது புதுச்சேரியின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்லப்படும் என்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.