முகப்பு /செய்தி /இந்தியா / கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சி.. டெல்லியில் கோலாகலம்!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சி.. டெல்லியில் கோலாகலம்!

பாசறை திரும்புதல்

பாசறை திரும்புதல்

29 ராகங்களில் முதன்மையான 'அக்னிவீர்', 'அல்மோரா', 'சத்புரா ராணி', 'பாகீரதி' போன்ற செவிகளை மயக்கும் இசைகள் ஒலிக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோலாகலமாக நடைபெற்றது.

டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயுதப் படைகளின் உச்சபட்ச தலைவரான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

29 ராகங்களில் முதன்மையான 'அக்னிவீர்', 'அல்மோரா', 'சத்புரா ராணி', 'பாகீரதி' போன்ற செவிகளை மயக்கும் இசைகள் ஒலிக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் இசை மழை பொழிந்தது.

இந்தியாவில் தயாரான 3 ஆயிரத்து 500 டிரோன்களைக் கொண்டு முதல்முறையாக நாட்டிலேயே மிக பிரமாண்ட ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக அது கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தின கொண்டாத்தின் இறுதி நிகழ்வாக வீரர்கள் தங்களது ஆயுதங்களை உரையில் இட்டு பாசறைக்கு திரும்பினர்.

First published:

Tags: Draupadi Murmu, Republic day