இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. பிங்காலி வெங்கையா ஆகஸ்ட் 2, 1876 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் இன்றைய மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவில் பிறந்தார். அவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுபவர். இதனால் அவர் 'ஜப்பான் வெங்கையா' என்று அழைக்கப்பட்டார்.
பிங்காலி வெங்கையா பிரிட்டிஷ் இந்திய இராணுவ சிப்பாயாக போரில் ஈடுபட தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் தான், யூனியன் ஜாக் பிரிட்டிஷ் வீரர்களிடையே உருவான தேசிய உணர்வு அவரை ஈர்த்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கையா தேசியக் கொடியின் பல மாதிரிகளை வடிவமைத்தார். 1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி ஒரு வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தார். மகாத்மாவுக்கு பிங்காலி வெங்கையா வழங்கிய பதிப்பில் இரண்டு கோடுகள் ( சிவப்பு மற்றும் பச்சை) மற்றும் மையத்தில் காந்திய காதர் ராட்டை சக்கரம் இருந்தது. காந்தியின் ஆலோசனையின் பேரில், வெங்கய்யா கொடியில் ஒரு வெள்ளை பட்டையைச் சேர்த்தார். அந்த தினத்தில் இருந்து தான் இந்தியாவிற்கான கொடி மூவர்ணக் கொடியாக மாறியது.
1921 முதல் அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பிங்காலி வெங்கையா கொடி முறைசாரா முறையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது மகாத்மாவின் அகிம்சை சுதந்திர இயக்கத்தின் சின்னமாக மாறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெங்கய்யா 1963 ஆம் ஆண்டில் மறதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஆனால் அவரது நினைவுகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. அவரது நினைவாக 2009 இல் அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. 2014 இல் அகில இந்திய வானொலியின் விஜயவாடா நிலையத்திற்கு அவரது பெயரிடப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Republic day