பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு பல்வேறு தேச தலைவர்களின் மாபெரும் போராட்டத்தால் இந்திய நாட்டிற்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. அதன் பின்னர் இந்தியா தனக்கான அரசியல் அமைப்பை உருவாக்கியது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1950 ஆம் ஆண்டில் இருந்து இது துவங்கப்பட்டது. அப்போதில் இருந்து இந்தியா, குடியரசு நாடு என்கிற அந்தஸ்தை பெற்றது.
இதில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு பலர் காரணமாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்பு என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது டாக்டர். அம்பேத்கர் அவர்கள் தான். ஆம், இவர் தான் நமது இந்திய அரசியல் அமைப்பின் தந்தையாவார். இவரின் விடாமுயற்சியின் காரணமாக தான் இந்திய அரசியல் அமைப்பு இயற்றப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பின் தந்தை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்காகப் போராடிய லட்சியத் தலைவர். மேலும் இவர் ஒரு பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். ஆகஸ்ட் 29, 1947 இல், இவர் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இதற்கு 'வரைவுக் குழு' என்று பெயரிட்டார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இக்குழுவின் தலைவராகவும், என். கோபாலசாமி, ஆலடி கிருஷ்ணசாமி அய்யாஸ், கே.எம். முன்ஷி, சைஜோ மோலா சாதுல்லா, என். மாதவ ராவ் மற்றும் டி.பி. கைதான் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

டாக்டர் அம்பேத்கர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
டாக்டர் அம்பேத்கர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். இவர் அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவை அரசியலமைப்புச் சபையில் அறிமுகப்படுத்தினார். இவர், மகாத்மா காந்தி கூறியது போல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளைக் கண்டு வளர்ந்தார். இதை ஒழிக்கவே தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
ALSO READ | இந்திய அரசியல் அமைப்பு பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்திய அரசியல் அமைப்பின் தாய் என்று போற்றப்படுபவர் மேடம் பிகாஜி காமா அவர்கள். ஒரு வசதியான பார்சி சவுராஸ்ட்ரியன் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு உள்ளார். மேலும் குழந்தையாக இருந்தபோது சிறந்த மொழிவளம் பெற்று விளங்கினார். செப்டம்பர் 24, 1861 ஆம் ஆண்டில் பிறந்த மேடம் பிகாஜி காமா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக, இந்திய அரசியல் அமைப்பின் தாயாக கருதப்படுகிறார்.

இந்திய அரசியல் அமைப்பின் தாய் மேடம் பிகாஜி காமா
பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்கள் போராட்டங்களுக்காக குரல் எழுப்பிய தலைவர்களில் இவரும் ஒருவர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்றும், அது பெண்களுக்கான பிற உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.