Home /News /national /

குடியரசு தினம் 2022 : இந்திய மூவர்ணக் கொடியின் வரலாறு, பரிணாமம் மற்றும் முக்கியத்துவம்

குடியரசு தினம் 2022 : இந்திய மூவர்ணக் கொடியின் வரலாறு, பரிணாமம் மற்றும் முக்கியத்துவம்

குடியரசு தினம் 2022

குடியரசு தினம் 2022

Republic Day 2022: இந்தியக் கொடியின் வண்ணங்கள், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றை இங்கே பார்ப்போம்.

ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது 72வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. குடியரசு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும், புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நம் தேசியக் கொடியான திரங்கா என்ற மூவர்ணக்கொடியை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுவார். இந்தியக் கொடியின் வண்ணங்கள், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றை இங்கே பார்ப்போம்.

இந்திய தேசியக்கொடியின் வரலாறு

இந்தியக்கொடியின் தற்போதைய வடிவமைப்பு பல்வேறு கட்டங்களில் பல வடிவங்களாக இருந்து, ஒவ்வொரு முறையும் மெருகூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் தேசியக்கொடியை சகோதரி நிவேதிதா 1904 ஆம் ஆண்டு முதல் முதலில் வடிவமைத்தார். அந்தக்கொடி, சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன், கொடியின் நடுப்பகுதியில் வஜ்ரா மற்றும் பக்கங்களில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது.

1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பாகன் சதுக்கத்தில், முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அந்த மூவர்ணக்கொடியில் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற மூன்று வண்ணங்கள், மூன்று பட்டைகளாக இருந்தன. இதைத் தவிர்த்து, எட்டு நட்சத்திரங்கள், இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிக்கும் படி அமைந்திருந்தது. மேலும், மஞ்சள் நிறப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சிவப்பு நிறப்பட்டையில் சூரியன், பிறை நிலவு மற்றும் நட்சத்திரம் இருந்தன.

ALSO READ |  தேசியக் கொடியை அவமானப்படுத்தியதா அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம்? சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் தேசியக்கொடியின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. 1917 ஆம் ஆண்டில், யூனியன் ஜாக், ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பட்டைகள் உடன், ஏழு நட்சத்திரங்கள் மற்றும் கூடுதலாக ஒரு நட்சத்திரத்துடன் இருக்கும் ஒரு பிறை நிலவு வடிவத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக்கொடியை, அன்னி பெசன்ட் அம்மையார் மற்றும் லோகமான்ய திலக் ஆகியோர் ஏற்றினார்கள்.

Republic Day 2022
குடியரசு தினம் 2022


அடுத்ததாக, 1921 ஆம் ஆண்டு பிங்கலி வெங்கையா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்வராஜ் கொடியை வடிவமைத்தார். இந்தக் கோடியில் முதலில் இருக்கும் மேற்புறப்பட்டை வெள்ளை நிறத்திலும், நடுப்பகுதி பச்சை நிறத்திலும், கீழ் பட்டை சிவப்பு நிறத்திலும் இருந்தது. கொடியின் நடுப்பகுதியில் நூற்பு சக்கரம் வடிவமைக்கப்பட்டு, அது மூன்று வண்ணங்களிலும் பரவியது மற்றும். இந்தக் கொடி, ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.

ALSO READ |  தேசிய பெண் குழந்தைகள் தினம்- இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்படுகிறதா?

அடுத்த வடிவமைப்பில், பெரிதான மாற்றங்கள் செய்யப்படாமல், வண்ணங்கல் மட்டும் இடம் மாறின. 1931 ஆம் ஆண்டில், வெள்ளை பட்டை நடுவில் மாற்றப்பட்டு, பச்சை பட்டை மேலே முதல் வரிசையில் இடம்பெற்றது. கீழே இருக்கும் சிவப்பு நிறம் குங்குமப்பூ நிறமாக மாறியது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நடுவில் அசோக சக்கரமாக மாற்றப்பட்டது.

 மூவர்ணக் கொடி
மூவர்ணக் கொடி


தற்போதைய கொடி, இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் டொமினியன் கொடியாக ஜூலை 22, 1947 அன்று வடிவமைக்கப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று, குடியரசாக மாறியவுடன், அதுவே நாட்டின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ALSO READ |  இந்திய அரசியல் அமைப்பு பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

இந்திய மூவர்ணக் கொடியின் முக்கியத்துவம்

இந்தியக்கொடியில் இருக்கும் குங்குமப்பூ நிறம் தைரியத்தைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதி மற்றும் உண்மையைக் குறிக்கிறது. பச்சை நிறம் வளர்ச்சி மற்றும் வளத்தைக் குறிக்கிறது. அசோகா சக்கரம் தர்மம் மற்றும் நீதியைக் குறிக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Republic day

அடுத்த செய்தி