இந்தியாவின் 72-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜபாதையில் மாநிலங்களின் ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இன்றைய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இந்தியாவின் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ராஜபாதையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
டெல்லி கேட் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதைக்கு அழைத்துவரப்பட்டார். அவர், 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதைத்தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 32 அலங்கார ஊர்திகள், பல்வேறு அமைச்சசங்களிலிருந்து ஒன்பது அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆறு அலங்கார ஊர்திகள் ஆகியவை நாட்டின் கலாச்சார, பாரம்பரிய, பொருளாதார மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படும். கடந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி 1,50,000 பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, பார்வையாளர்கள் எண்ணிக்கை 25,000-மாக குறைக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்