• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 72-வது குடியரசு தினம்: குறைந்த பார்வையாளர்களுடன் கொண்டாட்டத்துக்கு தயாராகிறது டெல்லி ராஜபாதை

72-வது குடியரசு தினம்: குறைந்த பார்வையாளர்களுடன் கொண்டாட்டத்துக்கு தயாராகிறது டெல்லி ராஜபாதை

குடியரசு தின விழா பேரணி(மாதிரிப் படம்)

குடியரசு தின விழா பேரணி(மாதிரிப் படம்)

இந்தியாவின் 72-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாப்படுகிறது.

  • Share this:
    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜபாதையில் மாநிலங்களின் ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இன்றைய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இந்தியாவின் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ராஜபாதையில் காட்சிப்படுத்தப்படும். 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 32 அலங்கார ஊர்திகள், பல்வேறு அமைச்சசங்களிலிருந்து ஒன்பது அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆறு அலங்கார ஊர்திகள் ஆகியவை நாட்டின் கலாச்சார, பாரம்பரிய, பொருளாதார மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படும். கடந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி 1,50,000 பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, பார்வையாளர்கள் எண்ணிக்கை 25,000-மாக குறைக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு நடைபெறும். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவருடைய வருகையை ரத்து செய்ததால் சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது.

    நாட்டுக்காக தங்களது உயிரை இழந்த ராணுவ வீரர்களுக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவதிலிருந்து குடியரசு தின நிகழ்ச்சி தொடங்கும். பின்னர், ராஜபாதையிலுள்ள மேடைக்கு வரும் பிரதமரும் இதர பிரமுகர்களும் அணிவகுப்பை பார்வையிடுவார்கள். 8 மணிக்கு பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: