Home /News /national /

குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

இந்திய குடியரசு தினம்

இந்திய குடியரசு தினம்

Republic Day : சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை ஏற்றும் வைபவத்தை பிரதமர் செய்வது வழக்கம், ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம்.

    சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை ஏற்றும் வைபவத்தை பிரதமர் செய்வது வழக்கம், ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம்.

    அதாவது நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி. இதில் இன்னொரு வித்தியாசம் என்னவெனில் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார். ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார். ஏனெனில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவரே.

    இன்னொன்று, சுதந்திர தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தின கொடி பறக்கவிடும் நிகழ்வு ராஜ்பாத்தில் நடைபெறும். குடியரசுத் தலைவர் கொடியை பறக்க விடுவார்.

    மேலும் குடியரசுத் தினத்தன்று இந்திய முப்படைகளும் அணிவகுப்பு மேற்கொள்ளும். குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார். இந்தியா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தினம் சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகையில், குடியரசு தினம் இந்திய அரசியல் சட்டத்தை தழுவும் தினத்தைக் கொண்டாடுவதாகும்.

    வரலாறு:

    நமது சுதந்திர தினம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலையைக் கொண்டாடும் அதே வேளையில், குடியரசு தினம் என்பது நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பை நினைவுகூருகிறது. 1929 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து இந்திய சுதந்திரப் பிரகடனத்தை (பூர்ண ஸ்வராஜ்) வெளியிட்டதால் ஜனவரி 26 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

    Read More : சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள் - முழு விவரம்

    அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக தனது முதல் பதவியை அன்று தொடங்கினார்.

    Must Read : மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!

    1950 இல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கச் சட்டத்தை (1935) மாற்றியது. ஜனவரி 26, 1950 அன்று, இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, அரசியலமைப்பின் முக்கிய கொள்கைகளை முன்வைக்கும் அறிக்கை, நடைமுறைக்கு வந்தது. இது நாடு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறுவதை நிறைவு செய்தது. இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் அவர்களின் அரசியல் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பு நிறுவுகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படைக் கடமைகளையும் இது நிறுவுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Republic day

    அடுத்த செய்தி