ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு? ஏப்ரல் 10-க்கு பின் முடிவெடுக்கப்படும் என தகவல்!

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு? ஏப்ரல் 10-க்கு பின் முடிவெடுக்கப்படும் என தகவல்!
மாதிரி படம்
  • Share this:
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு வரும் 10-ம் தேதிக்கு பின்னர் முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநில அரசுகளின் பரிந்துரை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும்பட்சத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விநியோகிப்பது மற்றும் உணவு பொருட்கள் இருப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் தங்களது நிலைப்பாட்டை வரும் 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.


Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading