ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பாரா?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பாரா?

ராகுல் காந்தி - மோதிலால் வோரா

ராகுல் காந்தி - மோதிலால் வோரா

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    காங்கிரஸ் கட்சியில் இடைக்காலத் தலைவராக நியமிப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மோதிலால் வோரா கூறியுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 352 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது.

    இந்நிலையில் இன்று ராகுல் காந்தி, ‘ நான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால் என்னால் தலைவராக தொடர்ந்து பணியாற்ற முடியாது. காலத்தை கடத்தாமல் காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய தலைவர் குறித்து முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மோதிலால் வோரா கூறியுள்ளார்

    மேலும் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படும் வரை அவர் தான் தலைவராக நீடிப்பார் என்றும் மோதிலால் வோராவை இடைக்காலத் தலைவராக நியமிப்பது குறித்து வெளியான செய்தி தவறானது என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Congress, Rahul gandhi