வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கை! நிதி ஆயோக் துணைத் தலைவர் விளக்கம்

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்

பணமதிப்பிழப்பால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு  நடத்திய வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கை இன்னமும் சரிபார்க்கப்படவில்லை. அதனை செய்தியாக வெளியிடுவது சரியானது அல்ல என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

  2017-2018-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு, வேலையின்மை குறித்து தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு ஆய்வு நடத்தியிருந்தது. பண மதிப்பு நீக்கம் தொடர்பாக முதன்முறையாக அரசு மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

  இருப்பினும், பிஸ்னஸ் ஸ்டேன்டர்ட்(Business Standard), இணையத்தில் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியானது. அதனடிப்படையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், ‘தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வை, 2010-2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுடன் ஒப்பிடமுடியாது.

  புள்ளிவிவர உறுப்பினர்கள் பதவி விலகல்: மத்திய அரசு விளக்கம்

  அப்போது, மேற்கொண்ட ஆய்வு மாதிரிகள், ஆய்வுமுறை(methodology) வித்தியாசமானது. அந்த ஆய்வு முடிவுகள் இதுவரையில் முழுமையாக வகைப்படுத்தப்படவில்லை. அது வெறும் வரைவு அறிக்கை மட்டுமே.

  அந்த ஆய்வு அறிக்கை இதுவரையில் சரிபார்க்கப்படவில்லை. இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை. அதனால், அந்த அறிக்கையை பயன்படுத்துவது சரியானது அல்ல. வெளியான ஆய்வு அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான், அந்த அறிக்கை இதுவரையில் பொதுவெளியில் வைக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: