முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய பொம்மை.. துணிப்பை.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி!

இந்திய பொம்மை.. துணிப்பை.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Mann Ki Baat : மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொருட்களை வாங்க பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த மக்கள் உறுதியேற்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 98 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகளவில் இந்திய பொம்மைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்றார்.டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வலிமை கண்கூடாக தெரிவதாக கூறிய மோடி,பெருந்தொற்று நேரத்தில் இ-சஞ்சீவனி செயலி மூலம் செல்போன் வாயிலாக மருத்துவ ஆலோசனை பெற்று ஏராளமான மக்கள் பயனடைந்ததாகவும் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் யுபிஐ பண பரிவர்த்தனை முறை உலகளவில் கவனம் பெற்று வருவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இந்தியாவும்-சிங்கப்பூரும் இணைந்து அண்மையில் யுபிஐ-பே நவ் ஆகிய முறைகளை இணைத்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

First published:

Tags: Mann ki baat