முகப்பு /செய்தி /இந்தியா / ரூபாய் நோட்டுகளில் சாவர்கர் படத்தை வைக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு இந்து மகாசபா கடிதம்

ரூபாய் நோட்டுகளில் சாவர்கர் படத்தை வைக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு இந்து மகாசபா கடிதம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்கர் படம் இடம் பெற வேண்டும் என இந்து மகாசாபை கோரிக்கை வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகாசபாவின் முன்னாள் தலைவருமான சாவர்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய பாஜக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும் புரட்சிகர போராட்ட வீரராக திகழ்ந்தவர் சாவர்கர். இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்கர் படத்தை அரசு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைக்கு சாவர்கரின் பெயரை சூட்ட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே சாவர்கருக்கு மோடி அரசு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்திய ரூபாய் நோட்டில் ஒரு மனிதரின் படம் இடம் பெற்றுள்ளது என்றால் அது அண்ணல் காந்தியின் படம் மட்டுமே. சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டன் மன்னரின் படம் இடம் பெற்றிருந்த நிலையில், அவரின் படம் மாற்றப்பட்டு சாரநாத் சிங்கமுகத் தூண்களின் படம் பயன்படுத்தப்பட்டது.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே காந்தியின் படத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 1969ஆம் ஆண்டில் தான் முதல் முதலாக காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம் பிடித்தது. காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் 1969இல் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வை கவுரவிக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டில் முதல் முறையாக காந்தியின் படம் சேர்க்கப்பட்டது.அதன் பின்னர் வேறு எந்த தனிநபரின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறவில்லை.

First published:

Tags: Indian Rupee, Rupee