புதுச்சேரி சட்டமன்றத்தின் வடக்குப்புறம் 48,987சதுர அடி பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் Circle De Pondicherry என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. மதுகுடிப்பது, பணம் வைத்து சீட்டு விளையாடுவது,டென்னிஸ் விளையாடுவது தான் இங்கு நடக்கிறது.
1978ம் ஆண்டு முதல் சொற்ப வாடகையே விதித்தும் செலுத்தப்படவில்லை என்பது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றப்பட்டுள்ளது.
1978ம் ஆண்டு முதல் சொற்ப வாடகையே விதித்தும் அதனை செலுத்தாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் Circle De Pondicherry- கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read: மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பலன்!
1978ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை மாத வாடகை 1250 ரூபாய் என இருந்தும் வாடகை பாக்கி 6,40,726 ரூபாய்.
அதன் பிறகு வாடகை 3,238 ரூபாய் என உயர்த்தியும் இது வரை ஒரு ரூபாய் கட்டவில்லை..நகரின் மையத்தில் அதுவும் சட்டமன்றத்திற்கு பக்கத்தில் 48,987சதுர அடி பரப்பளவு இடம் மிக பெரிய மோசடியை செய்திருப்பது RTI மூலம் வெளியாகி இருக்கிறது..
இந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்டமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கோரியுள்ளார்.
புதுச்சேரியில் தற்போது செயல்பட்டு வரும் சட்டமன்றத்திற்கு பதிலாக புதிய சட்டமன்ற வளாகத்தை தட்டாஞ்சாவடியில் கட்டுவதற்காக மத்திய அரசின் பாராளுமன்ற நிதியில் இருந்து 220 கோடி ரூபாய் ஒதுக்கித்தர வேண்டும் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் காணொளி மூலமாக பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Also Read: யூனிஸ் கானுக்கு கேப்டன் பதவி பறிபோக அஃப்ரிதி தான் காரணம்?
புதுச்சேரி மக்களின் நலன்கருதி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் புதியதாக சட்டமன்றம் கட்டுவதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள இடம் 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பு சாலையான ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே உள்ளது. இதன் அருகே அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனை, தொழிற்பேட்டை ஆகியவை அமைந்துள்ள
நிலையிலும், இந்த சந்திப்பில் மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையிலும், இங்கு சட்டமன்றம் கட்ட நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்காது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சந்திப்பில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து.
மேலும் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக சொற்ப அளவிலான 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு முழு அதிகாரம் இல்லாமல் அனைத்து கோப்புகளையும் துணைநிலை ஆளுநர் ஒப்புதலோடு செயல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் செயல்பட்டு வருவதுதான் இந்த சட்டமன்றம்.
இந்நிலையில் சட்டமன்றத்தை மட்டும் அங்கு கொண்டு செல்வதால் அரசு பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அரசு வாகனங்களின் பயன்பாடும் அதிகமாகும் நிலை ஏற்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் தற்போதுள்ள சட்டமன்றம் புராதானமான கட்டிடம் ஆகும். இந்த இடம் போதவில்லை எனில் சட்டமன்றத்தை ஒட்டி தெற்குப்புறம் முழுமையான செயல்பாடின்றி உள்ள முந்தையமகப்பேறு மருத்துவமனை மற்றும் Circle De Pondicherry இடத்தை எடுத்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry, RTI