• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமேசான் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு - பியூச்சர் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமேசான் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு - பியூச்சர் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமேசான், பியூச்சர்

அமேசான், பியூச்சர்

அமேசான், பியூச்சர் குழுமத்துக்கு இடையிலுள்ள பிரச்சனை தொடர்பான வழக்கில் பியூச்சர் குழுமத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    பிக் பஜார் உட்பட பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், குடோன்களை 24,713 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கியது. இதுதொடர்பாக அப்போது ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பியூச்சர் குரூப்பின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்தது.

    அதனைத் தொடர்ந்து பியூச்சர் குரூப் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதை எதிர்த்து அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சிங்கப்பூரில் அமேசானுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு இந்தியாவில் செல்லாது எனக் கூறி பியூச்சர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

    அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பியூச்சர் குருப் நிறுவனத்தின் சொத்துகளை ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைப்பதற்கு தடைவிதித்தது. மேலும், பியூச்சர் குரூப் குழு இயக்குநர்களை ஏன் கைது செய்யக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியது. அதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பியூச்சர் குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பியூச்சர் குழுமம் - ரிலையன்ஸ் குழுமத்துக்கு இடையேயான ஒப்பந்தம் இந்தியச் சட்டத்தின்படி செல்லும். மேலும், பியூச்சர் குழுமம், ரிலையன்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று செபி உள்ளிட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: