தனது ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் கொரோனா தடுப்பூசி வழங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்-சுரக்‌ஷா எனும் திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Share this:
ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மே.1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி  செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்-சுரக்‌ஷா எனும் திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டுவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே தொற்று பாதிப்பு ஏற்படுகிறது - மருத்துவ நிபணர்கள் தகவல்

நாடு முழுவதும் ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 13 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்கள் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: