• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரிலையன்ஸின் ஜியோ ஃவேர்ல்டு ட்ரைவ்- மும்பையின் மையமாக உருவாகும் ஷாப்பிங் மால்

ரிலையன்ஸின் ஜியோ ஃவேர்ல்டு ட்ரைவ்- மும்பையின் மையமாக உருவாகும் ஷாப்பிங் மால்

ஜியோ ஷாப்பிங் மால்

ஜியோ ஷாப்பிங் மால்

மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃவேர்ல்டு ட்ரைவ் என்ற ஷாப்பிங் மாலை திறந்துள்ளது.

  • Share this:
    ஜியோ ஃவேர்ல்டு ட்ரைவ் ஷாப்பிங் மால் திறப்பு தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மும்பையில் வர்த்தக மையமான பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உயர்தர சில்லறை வர்த்தக மையமான ஜியோ ஃவேர்ல்டு ட்ரைவ் மாலை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது. 17.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாலில் முக்கியமான 72 சர்வதேச மற்றும் இந்திய ப்ராண்ட் நிறுவனங்களில் ஷோரூம்கள் உள்ளன.

    உலக அளவில் பிரபலமான உணவுகளைக் கொண்ட 27 உணவகங்கள் இந்த மாலில் உள்ளன. மும்பையின் முதல் ரூப் டாப் திரையங்கங்களும் உள்ளன.

    ஃப்ரெஞ்ச் மாடலான நிஏஜ் மாடலில் மிகவும் பிரபலமான ரோஸ் போன்த்ரோன் மற்றும் ஆன்டி லம்பார்டால் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மால் வளாகத்துக்குள் பலதரப்பட்ட இந்தியா மற்றும் சர்வதேச கலைப்படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    ரிலையன்ஸ் மால்


    புகழ்பெற்ற ஓவியர்களால் சமகால ஓவியங்கள் வரையப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் ப்ராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தர்ஷன் மேத்தா, ‘இந்த ஷாப்பிக் மால் கேளிக்கை அனுபவத்தில் புதிய எல்லையை உருவாக்கிக்கொடுக்கும். மும்பையின் மையத்தில் உலகத்தின் முக்கியமான ப்ராண்ட் ஷோரூம்களை ஒரே இடத்தில் அணுக முடியும். இந்த மாலில் விரைவில் வரவுள்ள திரையரங்க வளாகம் கட்டாயம் காண வேண்டிய முக்கியமான இடம் என்ற இடத்தைப் பிடிக்கும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: